கடை முன் சிகரெட் பிடித்த இளைஞர்கள்... தட்டிக்கேட்க சென்ற 'சின்னப்பையனை' அடித்தே கொன்ற பயங்கரம்

Update: 2023-08-21 14:36 GMT

வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டை கிராமத்தில், பெட்டிக்கடை நடத்தி வந்தவர் சின்னபையன். இந்த கடைக்கு மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர், சிகரெட் வாங்கி கடையின் முன்பாக பற்ற வைத்துள்ளார். கடையின் முன்பு சிகரெட் பிடிக்க வேண்டாம் என முதியவர் சின்னபையன் கூறியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதுகுறித்து இளைஞர் தனது நண்பர்களிடம் கூறவே, அங்கு மதுபோதையில் வந்த கும்பல், சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த சின்னபையன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 5 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்