226 பயணிகளுடன் சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்துக்கு நொடியில் நேர்ந்த விபரீதம்
சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு, அதிகாலை 4 மணிக்கு 226 பயணிகளுடன் விமானம் புறப்பட தயாரானது. ஓடுபாதையில் சென்ற போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. அவசர அவசரமாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த விமானி, விமானத்தை நிறுத்தியதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு 226 பயணிகள், நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். உடனடியாக அங்கு வந்த பொறியாளர்கள் குழுவினர், விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை சரி செய்தார். சுமார் 4 மணி நேர தாமதத்திற்கு பிறகு, தாய்லாந்து விமானம் புறப்பட்டது.