ஆசையாய் வளர்த்த கரும்புகள் - டிராக்டர் வைத்து ஏற்றிய விவசாயிகள்

Update: 2023-09-02 09:21 GMT

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே காவனூர், கீரனூர், வள்ளியம் உள்ளிட்ட 13 கிராமங்களில், விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். ஆனால் சமீபத்தில் மஞ்சள் நோய் பாதிப்பால், கரும்புகள் மஞ்சள் நிறத்தில் மாறி வளர்ச்சி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கரும்புகளை தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பினால், அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட கரும்பு பயிர்களை, விவசாயிகள் டிராக்டர் மூலம் அழிக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்