கூடுதல் விலைக்கு மது விற்பனை... திடீர் ஆய்வில் சிக்கிய 3 ஊழியர்கள் பாய்ந்தது நடவடிக்கை
திருவாரூர் மாவட்டம் பேரையூர், முத்துப்பேட்டை, மணவாளன்பேட்டையில் செயல்படும் அரசு மதுபான கடைகளில், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பிரேம் சக்தி சுந்தர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மதுப் பிரியர்கள் அவரிடம் குற்றச்சாட்டை தெரிவித்தனர். இந்த கடைகளில் டாஸ்மாக் ஊழியர்கள் அதிக விலைக்கு மது விற்பது தெரியவந்தது. இதனையடுத்து விற்பனையாளர்கள் ராஜ்கண்ணன், சுரேஷ், குலோத்துங்க சோழன் ஆகிய மூவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அரசு நிர்ணயத்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.