மிரட்டும் `ரீமால்' புயல்... கொந்தளிக்கும் வங்கக்கடல்... விமானங்கள் ரத்து... வெளியான அறிவிப்பு

Update: 2024-05-25 10:22 GMT

வங்கக் கடலில் உருவாகியுள்ள ரீமால் புயல் எதிரொலியாக, அந்தமானுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் ஒரு நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் புயலாக வலுப்பெற்று மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இண்டிகோ மற்றும் ஆகாஷா விமான சேவை நிறுவனங்கள் வழக்கம் போல் அந்தமான் விமானங்களை இயக்குவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்