தமிழ்நாட்டில் உள்ள சிறந்த கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் - மத்திய கல்வி அமைச்சகம் வெளியீடு

தமிழ்நாட்டில் உள்ள சிறந்த கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் - முதலிடத்தில் உள்ள சென்னை ஐஐடி...;

Update: 2022-07-16 09:52 GMT

தமிழ்நாட்டில் உள்ள சிறந்த கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் - மத்திய கல்வி அமைச்சகம் வெளியீடு

தமிழ்நாட்டில் உள்ள சிறந்த கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் - முதலிடத்தில் உள்ள சென்னை ஐஐடி

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளின் ஒட்டுமொத்த தரவரிசை என்று எடுத்து கொண்டால், சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. 16வது இடத்தில் அமிர்தா வித்யாஸ்ரம் கல்லூரியும், 18வது இடத்தில் வேலூர் விஐடி கல்லூரியும் 21வது இடத்தில் திருச்சி என்ஐடி கல்லூரியும், 22வது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகமும் உள்ளன. தலைச்சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில்,கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் 5வது இடத்திலும், வேலூர் விஐடி 9வது இடத்திலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 15வது இடத்திலும் உள்ளன.கலை அறிவியல் கல்லூரிகள் என்று எடுத்து கொண்டால் 3வது இடத்தில் சென்னை பிரசிடென்சி கல்லூரியும், 4வது இடத்தில் லயோலா கல்லூரியும், 6வது இடத்தில் கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணாம்மாள் கல்லூரியும் இடம்பிடித்துள்ளன.என்ஜீனியரிங் கல்லூரி என்று எடுத்து கொண்டால், முதல் இடத்தில் ஐஐடி சென்னையும், 8வது இடத்தில், என்ஐடி திருச்சியும், 12வது இடத்தில் விஐடி வேலூர் கல்லூரியும் உள்ளன.மருத்துவ கல்லூரி தரவரிசை பட்டியலில் 3வது இடத்தில் வேலூர் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரியும், 8வது இடத்தில், கோவை அமிர்தா வித்யாஸ்ரம் கல்லூரியும், 12வது இடத்தில், சென்னை மருத்துவ கல்லூரியும் இடம்பிடித்துள்ளன.பல் மருத்துவ கல்லூரிகள் என்று எடுத்து கொண்டால், சென்னை சவீதா கல்லூரி முதலிடத்திலும், 8வது இடத்தில், சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியும், 13 வது இடத்தில், சென்னை ராமசந்திரா கல்லூரியும் உள்ளன., சட்ட கல்லூரி தரவரிசையில், தமிழகத்தை சேர்ந்த ஒரு கல்லூரி கூட டாப் - 10 வரிசையில் இடம் பெறவில்லை 

Tags:    

மேலும் செய்திகள்