அரசியல் பயணம்?.. சிம்பிளாக சொன்ன லாரன்ஸ்

Update: 2024-05-26 13:17 GMT

அரசியலுக்கு வருவதற்காக தான் உதவிகள் செய்யவில்லை என்றும், மக்கள் போகப் போக தன் அன்பைப் புரிந்து கொள்வார்கள் எனவும் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்... +2 பொதுத் தேர்வில் 592 மதிப்பெண்கள் எடுத்த சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மாணவி வர்ஷினியின் இல்லத்திற்கு நேரில் சென்று கல்வி உதவித் தொகையாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கிய லாரன்ஸ், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார்... மேலும், இது கடவுளுக்கு செய்யும் சேவையாக கருதி செய்யும் வேலை எனவும் நெகிழ்ச்சி தெரிவித்தார்... மாணவி வர்ஷினுக்கு கல்லூரியில் சேர சீட் வாங்கிக் கொடுத்ததும் ராகவா லாரன்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்