வேங்கை வயல் விவகாரம்... உள்ளூர் காவலரிடம் தோண்டி துருவிய CBCID... 4 மணிநேர விசாரணை...

Update: 2024-05-23 16:28 GMT

வேங்கை வயல் குடிநீர் தொட்டி விவகாரத்தில், அதே ஊரைச் சேர்ந்த காவலர் முரளி ராஜாவுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி புதுக்கோட்டையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு முரளி ராஜா ஆஜரானார். அவரிடம், சிபிசிஐடி எஸ்.பி கல்பனா தத் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, காவலர் முரளி ராஜாவை பார்க்க வேண்டும் என்று சிபிசிஐடி அலுவலகத்திற்குள், வழக்கறிஞர்கள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினருடன், வழக்கறிஞர்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். இதனால் சிபிசிஐடி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்