பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் சண்டை போட்ட வைரல் காவலருக்கு நேர்ந்த சோகம்.. ஹாஸ்பிடலில் ஏறும் ட்ரிப்ஸ்

Update: 2024-05-24 03:34 GMT

நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற அரசு பேருந்தில் ஏறிய காவலர் ஆறுமுகப்பாண்டி நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு டிக்கெட் எடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. அது குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னை பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் ஆறுமுகப்பாண்டியிடம் ஆயுதப்படை உதவி ஆணையர் சீனிவாசன் துறை ரீதியிலான விசாரணை நடத்திய போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து, சக காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்