போலீஸிடம் இருந்தே தன்னை காப்பாற்ற ஹோட்டல்காரர் 100-க்கு அழைத்த பரிதாபம்

Update: 2023-08-16 06:00 GMT

சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரிடம், மது போதையில் இருந்த இரு காவலர்கள் தகராறில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது...சென்னை தி.நகர் பகுதியில் காசிம் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது ஹோட்டலுக்கு மாம்பலம் ஆர்.1 காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு காவலர்கள் உணவு உண்பதற்காக வந்துள்ளனர். மது போதையில் இருந்த இருவரும், உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து சாப்பிட்ட உணவிற்கு ஹோட்டல் உரிமையாளர் காசிம், காவலர்களிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த இரு காவலர்களும், காசிமை தகாத வார்த்தைகளில் சொல்லி பணம் தர மறுத்ததாக தெரிகிறது. இதனைத் தட்டிக்கேட்ட நபரிடமும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் காவல் உதவி எண் 100க்கு அழைத்த நிலையில், விரைந்து வந்த போலீசார் இருவரையும் அழைத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்