இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை வரும் 8 ஆம் தேதி வரை...;

Update: 2022-07-05 02:23 GMT

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை வரும் 8 ஆம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, கடந்த ஞாயிற்று கிழமை அன்று யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடல்பரப்பில் மீன் பிடித்ததாக, 12 மீனவர்களை கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். தற்போது கைது செய்யப்பட்டவர்களை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்