தொடரும் போதை ஊசி மரணம்..அனாதை பிணம் போல் போட்டுவிட்டு ஓடிய நண்பர்கள் - கதறும் தாய் தந்தை..

Update: 2024-05-25 13:11 GMT

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த அமீர்- மும்தாஜ் தம்பதியின் 17 வயது மகன் எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுவன் நேற்று காலை 7 மணியளவில் வேலைக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு, பிராட்வே பகுதியில் உள்ள நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு 5 நண்பர்களுடன் சேர்ந்து போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் திடீரென சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டதால் அவரது நண்பர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த எஸ்பிளனேடு போலீசார் இறந்த சிறவனின் பேண்ட் பாக்கெட்டை சோதனை செய்தபோது போதை ஊசி இருந்தது தெரியவந்தது. நண்பர்களுடன் ஏற்பட்ட போதை ஊசி பழக்கத்தால் மகனின் உயிர் பறிபோனதாக தாய் மும்தாஜ் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்