நாட்டையே மிரளவிட்ட சம்பவத்தை செய்த கொடூரனை சென்னைக்கு தூக்கி வந்த NIA

Update: 2024-04-28 02:37 GMT

பெங்களூரு ராமேஸ்வர கபே குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியை, சென்னை அழைத்து வந்து, என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கடந்த மார்ச் 1-ம் தேதி பெங்களூருவில் உள்ள ராமேஷ்வரம் கபே ஓட்டலில் வெடிகுண்டு வெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்த குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி அப்துல் மதீன், குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன் சென்னைக்கு வந்து திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்ததும், மயிலாப்பூரில் உள்ள தனியார் மாலுக்கு சென்று தொப்பி வாங்கியதையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை சென்னை அழைத்து வந்து, சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், அப்துல் மதின் தாஹாவை, என்ஐஏ அதிகாரிகள், ஆந்திராவிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் சென்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணையை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்