இந்நிறுவனத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்தவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் மோசடி புகாரளித்த நிலையில், 17 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 10 பேர் வரை கைது செய்யப்பட்டனர். 117 பேர் புகார் அளித்ததன் பேரில் 752 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நியோ மேக்ஸ் இயக்குநர்கள் இசக்கிமுத்து, சகாயராஜ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி பொருளாதார குற்றப்பிரிவுகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், நாள்தோறும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை முன் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளோடு பிணை வழங்கப்பட்டது.