ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்த முருகன் புத்தாண்டில் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம்
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டை பிறப்பை ஒட்டி, ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏழாவது படைவீடான இந்த கோயிலில், மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சந்தனம் ஜவ்வாது, பால், பன்னீர் போன்ற பதினாறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. முருகப் பெருமான் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதலே பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவில் செல்வதற்கு இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் அடிவாரத்தில் இருந்து மினி பேருந்துகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது