மனைவியை அனுப்பாத மாமியார் விரட்டி விரட்டி குத்திய மருமகன்

Update: 2023-11-22 11:24 GMT

சிவகங்கை மாவட்டம் காளையர் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாதேவி. இவர் தனது மூன்றாவது மகளான ஆர்த்தி என்பவரை, திண்டுக்கல் மாவட்டம் வெள்ளையன் பட்டியை சேர்ந்த பிரபு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், கொல்லங்குடி அருகேயுள்ள அழகாபுரியில் தம்பதி வசித்து வந்துள்ளனர். கடந்த ஒரு வருடமாகவே தம்பதிக்கிடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதனால் தீபாவளி அன்று தாய் வீட்டிற்கு சென்ற ஆர்த்தி, அதன் பின் கணவனிடம் திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரத்தில் இருந்த பிரபு மாமியாரின் வீட்டிற்கு சென்று தன்னுடன் வருமாறு மனைவியை அழைத்த நிலையில், மாமியாரான மகாதேவிக்கும், பிரபிவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதேபோல், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மதுபோதையில் இருந்த பிரபு, மனைவியை தன்னுடன் வாழவிடாமல் தடுப்பதாக கூறி மாமியாரை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்பு, தானாகவே சென்று பிரபு போலீசில் சரணடைந்த நிலையில், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்