மணிப்பூர் கலவரம்... "மத்திய அரசு நினைத்திருந்தால்.." - சீமான் காட்டம்
மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறியதாக மத்திய அரசையும் அம்மாநில பாஜக அரசையும் கண்டித்து, சென்னையில், நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சீமான் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சீமான், மணிப்பூரில் கலவரத்தை தடுக்க நினைக்கவில்லை என்றும், மாறாக அது வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்ள நினைக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். நாடு நல்லவர்கள் கையில் இல்லாததால்தான் இது போன்ற வன்முறைகள் நடப்பதாக சீமான் வேதனை தெரிவித்தார்.