போயஸ் தோட்ட கோயில் குருக்களுக்கு கொலை மிரட்டல்?... ஜெ.தீபாவின் கணவர் மீது போலீசில் புகார்

Update: 2023-08-16 02:59 GMT

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள கோயில் குருக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில், தீபாவின் கணவர் மாதவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அருகிலுள்ள விநாயகர் கோயிலில், ஹரிஹரன் என்ற குருக்கள், 20 ஆண்டுகளாக பூஜை செய்து வருகிறார். இந்நிலையில், அவரை பூஜை செய்ய விடாமல் தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குருக்கள், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தீபாவின் கணவர் மாதவனை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்