"இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் மீது 33 %... சொத்து வரி.."

Update: 2024-05-25 16:54 GMT

மத்திய அரசின் வரி வருமானத்தை பல மடங்கு அதிகரிக்கச்

செய்யவும், ஏழை பணக்காரர் வேறுபாடுகளை குறைக்கவும்,

பெரும் பணக்காரர்கள் மீது 2 சதவீத சொத்து வரி விதிக்க

வேண்டும் என்று, வெள்ளியன்று வெளியான இந்த அறிக்கை

பரிந்துரை செய்துள்ளது. 10 கோடி ரூபாய்க்கும் சொத்து மதிப்பு

கொண்டவர்கள் மீது ஆண்டுக்கு 2 சதவீத சொத்து வரியும்,

அவர்கள் இறந்த பின், 33 சதவீத வாரிசுதாரர் வரியும்

விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதன் மூலம்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் 2.7

சதவீதம் அளவுக்கு கூடுதல் வரி வருவாய் கிடைக்கும் என்று

கணித்துள்ளது. இந்த வரி விதிப்பினால் 99.99 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறியுள்ளது. பிரான்ஸை சேர்ந்த புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டி இந்த ஆய்வறிக்கையை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்