"5 மணி நேரத்தில்..." சென்னையை அலறவிட்ட கும்பல் - அரங்கேறிய மெகா ஆபரேஷன்

Update: 2023-12-17 06:28 GMT

சென்னை ரயில் நிலையத்தில் போலீஸ் என கூறி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவத்தில் 5 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

Vovt

சென்னை வடக்கு கடற்கரை ரயில் நிலையத்தில் நடைமேடையில் அமர்ந்திருந்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சிராஜ் என்பவரிடம் போலீஸ் என கூறி, அவரது பையை சோதனை மேற்கொண்ட கும்பல் 20 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்ற நிலையில் இதுகுறித்து ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர். சிசிடிவி ஆதாரத்தின்படி வடக்கு கடற்கரை ரயில் நிலையத்திலேயே ஒருவர் கைது செய்யப்பட்டார்... தொடர்ச்சியாக பீச் ஸ்டேஷனில் இருந்து பேருந்துகள் மூலமாக இருவர் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்ற நிலையில் உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அங்கு இருவரையும் கைது செய்து செய்தனர்... மூவரும் அளித்த தகவலின்படி செல்போன் சிக்னலை வைத்து போலீசார் மீதமுள்ளவர்களைத் தேடி வந்தனர்... பீச் ஸ்டேஷனில் இருந்து ஒருவர் கூடுவாஞ்சேரி வரை பேருந்தில் சென்று விட்டு மீண்டும் ரயில் மூலம் வந்து கொண்டிருந்த போது பார்க் ஸ்டேஷனில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது... இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன... 5 மணி நேரத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் உதவியுடன் இருப்பு பாதை போலீசார் குற்றவாளிகளை பிடித்து பணத்தை பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்