குருவாயூர் எக்ஸ்பிரஸில் அசம்பாவிதம்.. இழுக்கப்பட்ட அபாய சங்கிலி.. கொட்டிய ரத்தம்

Update: 2024-05-23 06:13 GMT

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் இடையே ஏற்பட்ட மோதலால் அபாய சங்கிலி இழுக்கப்பட்டு ரெயில் நிறுத்தப்பட்டது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் கடைசி பெட்டியில் ஏறிய கேரள மாநில பயணிகளுக்கும், ஏற்கனவே ரயிலில் இருந்த பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரெயில் புறப்பட்டநிலையில், மதுபோதையில் இருந்த கேரள மாநில பயணிகள் 4 பேரும் மற்ற பயணிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டதால் அபாய சங்கிலியை இழுத்து ரெயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ரயிலில் இருந்து கேரள பயணிகளை இறக்கி விட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள் கற்களை வீசி தாக்க முயன்றதுடன், ஒருவர் மின் கம்பத்தில் தனது தலையை ஆக்ரோசத்துடன் முட்டியதில் ரத்தம் வர தொடங்கியுள்ளது. ரெயில் நிறுத்தப்பட்டதால் அங்கு வந்த போலீசார் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக குறுக்குத்துறை ரயில்வே கேட் பகுதியில் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்