அரசு நிலத்தை 5 கோடிக்கு விற்ற கும்பல்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2024-05-26 11:44 GMT

சென்னை அடுத்த புழுதிவாக்கம், சீனிவாசா நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் காஞ்சிபுரம், ஆதனூர் கிராமத்தில் எம்.ஜி.ஆர் நகர் என்ற மனைப் பிரிவில், 58 ஆயிரத்து, 500 சதுர அடி கொண்ட நிலத்தை வாங்கினார். இந்த நிலையில் பிரவீன் குமாருக்கு தான் வாங்கிய நிலத்தின் மீது சந்தேகம் எழவே, தாம்பரம் போலீஸ் கமிஷ்னரிடம் இது குறித்து புகார் தெரிவித்தார். இது தொடர்பாக, மடிப்பாக்கத்தை சேர்ந்த முருகன், அவரது மனைவி திருச்செல்வி, தேவா ஆகிய மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. எம்ஜிஆர் நகர் மனைப்பிரிவானது அரசுக்கு சொந்தமான பூங்கா நிலமாகும். இதனை மனைப்பிரிவு, உரிமையாளருடன் கூட்டு சேர்ந்து, முருகன் உள்ளிட்ட மூவரும் பொது அதிகாரம் ஆவணம் பெற்றனர். பின்னர் பிரவீன்குமாரிடம், 5.31 கோடி ரூபாய் ரொக்கமாகவும், காசோலையாகவும் பெற்றுக் கொண்டு நிலத்தை பதிவு செய்து விற்பனை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் குற்றவாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்