EVM மெஷின் விவகாரம் - சென்னை ஐகோர்ட் சொன்ன தகவல்

Update: 2024-04-05 11:18 GMT

தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய நடைமுறையை மாற்றக் கோரியும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்க உரிய விதிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என கோரி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆஜரான, தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், மூன்றாம் தலைமுறை வாக்குப்பதிவு இயந்திரம் 2013ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் 2021 சட்டமன்ற தேர்தலில் இதே இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, மனுதாரர் கட்சி வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கை ஏற்றால் அது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் என வாதம் செய்தார். தற்போதைய தேர்தலுக்காக இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை பின்னர் பரிசீலிக்கலாம் எனக் கூறி, விசாரணையை ஜூன் 25ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்