அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்.. ஈபிஎஸ் தொண்டர்களுக்கு வைத்த கோரிக்கை | ADMK | EPS

Update: 2024-03-23 10:11 GMT

சேலம் ஓமலூர் அதிமுக புறநகர் கட்சி அலுவலகத்தில் சேலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியான தேமுதிக நிர்வாகிகள் என ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர். வேட்பாளர் விக்னேஷை அறிமுகம் செய்து வைத்த ஈபிஎஸ், தேர்தல் அறிக்கை குறித்து விளக்கமாக எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என அதிமுக, தேமுதிக கட்சியினரைக் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், சேலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகை பகுதியில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து ஈபிஎஸ் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்