Chennai Train | ஓடும் ரயிலில் ஸ்டண்ட் காட்டும் பள்ளி மாணவர்கள் - எச்சரித்த தெற்கு ரயில்வே
Chennai Train Stunt | ஓடும் ரயிலில் ஸ்டண்ட் காட்டும் பள்ளி மாணவர்கள் - `ரீல்ஸ்க்காக ரிஸ்க்..' - எச்சரித்த தெற்கு ரயில்வே
ரீல்ஸ் மோகத்தால் ஓடும் ரயிலில் ஆபத்தான சாகசங்கள் செய்ய வேண்டாம் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் இரண்டு பள்ளி மாணவர்கள் ஓடும் ரயிலில் தொங்கி, பிளாட்பாரத்தில் காலணிகளை வைத்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ வலைதளத்தில், “ரீல்ஸுக்காக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றும், ஒரு நிமிடம் தவறினால் மொத்த வாழ்க்கையும் போய்விடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.