Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (12.01.2026)| 1 PM Headlines | ThanthiTV

Update: 2026-01-12 07:50 GMT
  • கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக, தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்... கூட்ட நெரிசலில் 41 பலியானது தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துகிறது...
  • விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கோரி, படத்தின் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது... தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த‌தை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது... 
  • தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 760 ரூபாய் உயர்ந்து இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
  • பொங்கல் பண்டிகைக்கான ரயில் தட்கல் முன்பதிவு தொடங்கிய, சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்று தீர்ந்தது... ஏசி மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிக்கான டிக்கெட் விற்றுத் தீர்ந்ததால் ஏராளமான பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்...  
  • சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அயலக தமிழர் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், வரலாறு காணாத வகையில் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவித்தார்... வெளிநாடுகளிலும் தமிழ் மொழி வளர பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் முதல்வர் கூறினார்...
  • மதுரையில் அறிஞர் அண்ணா பூங்காவின் பெயர் மாற்றப்பட்டதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்... பூங்கா தொடர்ந்து அண்ணா பெயரிலேயே இயங்க உடனடியாக வழிவகை செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்...
Tags:    

மேலும் செய்திகள்