காட்டாற்று வெள்ளத்தில் ஆபத்து தெரியாமல் ஆனந்த குளியல் போட்ட சிறுவர்கள்

Update: 2023-09-30 15:45 GMT

 கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றிற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கண்டரக்கோட்டை மற்றும் விஸ்வநாதபுரம் பகுதிகளில் தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள தடுப்பணைகளில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இந்நிலையில், அப்பகுதி சிறுவர்கள் ஆற்றின் ஆபத்தை உணராமல் தடுப்பணையில் துள்ளி குதித்து விளையாடி வருகின்றனர். சிறுவர்களுக்கு பெற்றோர் எச்சரிக்கை அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்