OMR சாலையில் சுங்கக்கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

OMR சாலையில் சுங்கக்கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி;

Update: 2022-06-26 13:28 GMT

ஓஎம்ஆர் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில், வரும் 1-ஆம் தேதி முதல், சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இந்தியாவில் நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டுனர்களில் இருந்து சுங்கச்சாவடிகளில் ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் நாளில் சுங்காகட்டனம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ஓ.எம். ஆர் சாலையிலுள்ள நாவலூர் சுங்கச்சாவடிகளில், சுங்கக் கட்டணங்கள் உயர்த்துவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியானது. இதையடுத்து,நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு குறித்து, வாகன ஓட்டிகளிடம், சுங்கச்சாவடி ஊழியர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் 3 மாதத்தில் மீண்டும் சுங்கக் கட்டணம் உயர்த்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்