சென்னையில் ஆன்லைன் மூலம் சொகுசு கார்- வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - உஷார் இப்படியும்

Update: 2024-04-18 09:05 GMT

#thanthitv #carthief #chennai #tamilnadu #cars

சென்னையில் ஆன்லைன் மூலம் சொகுசு கார்

வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி -

உஷார் இப்படியும் நடக்கலாம்

சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர், ஆன்லைனில் சொகுசு கார் ஒன்று, 8 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்னர் உரிமையாளரை செல்போன் மூலம் தொடர்புகொண்ட அவர், அந்தக் காரை 8 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து வாங்கியுள்ளார். சிறிது நாட்கள் கழித்து, வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென மாயமாகியுள்ளது. இதுதொடர்பாக கார்த்திக் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், ஆன்லைனில் காரை விற்பனை செய்த கும்பல், டூப்ளிகேட் சாவியை பயன்படுத்தி அதே காரை திருடியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட தூத்துக்குடியை சேர்ந்த ஹரிஹர முகேஷ், திருநெல்வேலியை சேர்ந்த உலகநாதன், திண்டுக்கல்லை சேர்ந்த சுரேஷ், தேனியை சேர்ந்த டேவிட் பிரகாஷ் உட்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 உயர ரக வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர் 

Tags:    

மேலும் செய்திகள்