வீட்டிற்குள் துர்நாற்றம்..கதவை திறந்த நண்பனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..கடலூரில் அதிபயங்கர சம்பவம்

Update: 2023-12-13 05:39 GMT

கடலூர் மாவட்டம், தென்கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 5 நாள்களுக்கு முன்பு கடையில் இருந்து வீட்டிற்கு பொருள்களை வாங்கி சென்ற பின் வீட்டை பூட்டிவிட்டு படுத்துள்ளார். 5 நாள்களாக அவர் வெளியே வராததால், நண்பர்கள் சிலர் அவரைக் காண அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, முருகன் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, உயிரிழந்த முருகனின் தம்பி மனைவி வேம்பரசி என்பவர், முருகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது செல்போனை மீட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் புகாரளித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்