சிறையின் தலைமை காவலரை தாக்கிய கைதி - பேரதிர்ச்சியில் போலீசார்

Update: 2023-08-25 17:24 GMT

சென்னை, புழல் சிறையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த கைதியை வேறு அறைக்கு மாற்றியதால் ஏற்பட்ட தகராறில், சிறையின் தலைமை காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, புழல் சிறையில் செல்போன் மற்றும் போதைப் பொருள்களின் பயன்பாடு குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, போதை பொருள் கடத்தல் வழக்கில், சிறையின் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்ட நைஜீரியா நாட்டை சேர்ந்த டேவின் என்பவரின் அறையிலிருந்து செல்போன், சிம்கார்டு மற்றும் ஏர் பட்ஸ்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனால், கைதி டேவிட்டை அதிகாரிகள் வேறு அறைக்கு மாற்றிய நிலையில், இதனை கண்டித்து சக நைஜீரிய கைதியான இமானுவேல் என்பவர், சிறை அலுவலுருடன் தகராறில் ஈடுபட்டார். சம்பவ இடத்திற்கு வந்து தகராறை சமாதானப்படுத்த முயன்ற சிறையின் தலைமை காவலர் செல்வன் என்பவரை கைதி தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கைதி இம்மானுவேல் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்