கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி..நிலத்தை உழுவதற்கு உடலை கருவியாக்கிய விவசாயி

Update: 2023-12-02 12:12 GMT

கீழப்பெருங்கரை கிராமத்தை சேர்ந்த விவசாயி விஜயகுமார், நடவிற்கு முன் நிலத்தை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். காளை மாடுகள் தட்டுப்பாடு, டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், விவசாயி, தனது உடலையே கருவியாக்கி நிலத்தை சீர் செய்தார். பெரிய கட்டையில் கயிறு கட்டி, மாட்டிற்கு பதிலாக தனது உடல் உழைப்பை பயன்படுத்தி, மனைவியின் உதவியுடன் விளைநிலத்தை சமன் செய்தார். டிராக்டர் கொண்டு பரம்பு அடிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு ஆயிரத்து 800 வரை கூடுதல் செலவாகுவதாக கூறிய விவசாயி, நீள மரக்கடையில் கயிறு கட்டி இழுத்து நிலத்தை உழுதால் செலவினம் குறைவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்