ரூ.35 கோடி செலவில் 6 மாடியில் 239 படுக்கைகளுடன் நவீன புதிய மனநல காப்பகம்

Update: 2024-05-23 03:18 GMT

கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் நிலையத்திற்காக 35 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற வருபவர்களுக்குச் சிறந்த மருத்துவச் சேவையை வழங்குதற்கான நவீன உபகரணங்களுடன் கூடிய புதிய மனநல மற்றும் நரம்பியல் நிலையத்திற்கான ஒப்புயர்வு மையக் கட்டடம் 88 ஆயிரத்து 39 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் 239 படுக்கை வசதிகளுடன் உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது... இது விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது... தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 4 ஆயிரத்து 821 கோடியே 55 இலட்சம் ரூபாய் செலவில் 941 மருத்துவ துறைச் சார்ந்த புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், இவை மட்டுமல்லாமல் மேலும் பல புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்