"உடற்பயிற்சிக் கூடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்" - காவல் ஆணையர் ரவி
பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி தனது மகளுடன் கலந்து கொண்டார்.;
பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி தனது மகளுடன் கலந்து கொண்டார். இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வைத் துவக்கி வைத்த காவல் ஆணையர் ரவி, தனது மகளும் மருத்துவருமான இதழ்யாவுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களே இல்லாத சூழல் உருவாக்கப்படும் என்று உறுதியளித்ததுடன், மருத்துவமனைகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.