கொசு ஒழிப்பிற்கு சென்னை மாநகராட்சியின் புதிய ஐடியா! | Chennai Corporation
கொசு ஒழிப்பிற்கு சென்னை மாநகராட்சியின் புதிய ஐடியா!;
கொசுத்தொல்லையை மட்டுப்படுத்த, சென்னை மாநகராட்சி சார்பாக ட்ரோன்களை பயன்படுத்தி கழிவு நீர் தேக்கங்களில் லார்விசைட் தெளிக்கப்பட்டுவருகிறது. ஆளில்லா ட்ரோன்களை பயன்படுத்தி கொசு மருந்து தெளிக்கும் முறையை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ராயபுரத்தில் இன்று தொடங்கி வைத்தார். அண்ணா பல்கலையில் உள்ள ஏவியனிக்ஸ் பிரிவு உதவியோடு இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி கூவம் நதி, பக்கிங்காம் கால்வாய் மற்றும் அடையாறு பகுதிகளிலும் ஆளில்லா ட்ரோன்களை பயன்படுத்தி மருந்து தெளிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.