இருதய சிகிச்சை பெற்ற நபர் உயிரிழப்பு - போராட்டத்தில் எம்பி விஜய் வசந்த் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் 10 ஆண்டு உத்திரவாதம் என கூறி 55 வயது நபருக்கு இருதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.;

Update: 2022-02-12 16:26 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் 10 ஆண்டு உத்திரவாதம் என கூறி 55 வயது நபருக்கு இருதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், இருதய சிகிட்சை மேற்கொண்ட நபர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தாங்கள் செலவு செய்த 7 லட்சம் ரூபாயை திரும்ப தரவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் அவர்களுக்கு ஆதரவாக மருத்துவமனை முன்பு போரட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்