"தமிழக அரசின் திட்டங்களை கர்நாடகா அரசு எதிர்க்கும்" - கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கருத்து
"தமிழக அரசின் திட்டங்களை கர்நாடகா அரசு எதிர்க்கும்" - கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கருத்து;
"தமிழக அரசின் திட்டங்களை கர்நாடகா அரசு எதிர்க்கும்" - கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கருத்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் நதிகளை இணைக்க முயன்று வரும் தமிழக அரசின் திட்டங்களை, கர்நாடகா சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து எதிர்க்கும் என, அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.பெங்களூருவில் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுனர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், பிப்ரவரி முதல் வாரத்தில் எதிர் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களது கருத்தையும் கேட்ட பின்னர், அடுத்த கட்ட முடிவை, அரசு எடுக்கும் என தெரிவித்தார். தமிழக அரசின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாவது பகுதி மற்றும் நதிகளை இணைக்கும் திட்டம், காவிரி குண்டாறு திட்டத்தையும், கர்நாடக அரசு சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்க்கும் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.