முகக் கவசம் அணியாத ஓட்டுநர்களுக்கு பரிசோதனை..மாநகர போலீசார் நடவடிக்கை

திருநெல்வேலியில், முகக் கவசம் அணியாமல் சென்ற ஓட்டுநர்களை பிடித்த போலீசார், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர்.;

Update: 2022-01-20 16:28 GMT
திருநெல்வேலியில், முகக் கவசம் அணியாமல் சென்ற ஓட்டுநர்களை பிடித்த போலீசார், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். நெல்லையப்பர் கோயில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், முகக் கவசம் அணியாமல் வந்த ஓட்டுநர்களை மடக்கிப் பிடித்து கொரோனா பரிசோதனை செய்ய வைத்தனர். இதற்காக, மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தனர். இதேபோல், கேடிசி நகரில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியிலும், முகக் கவசம் அணியாத ஓட்டுநர்களின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது
Tags:    

மேலும் செய்திகள்