"விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை - வரும் 22ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்" - OPS , EPS

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி, அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.;

Update: 2022-01-20 02:26 GMT

இதுதொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெய்த கனமழை, விவசாயிகளின் எதிர்காலத்தை கோள்விக்குறியாக்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும், திமுக அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சட்டியுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, வரும் 22ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்