தனியார் கல்லூரியில் உலா வரும் சிறுத்தை - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகம் அருகே இரவில் உலாவரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.;

Update: 2021-12-29 14:12 GMT
கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகம் அருகே இரவில் உலாவரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மதுக்கரை வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர். நேற்றிரவு குனியமுத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியின் பின்புறம் சிறுத்தை ஒன்று நாயை அடித்து கொன்றுள்ளது. இது குறித்து தகவலறிந்து வனத்துறையினர் கல்லூரியில் இருந்த சிறுத்தையின் கால்தடத்தை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் சிறுத்தை நடமாட்டத்தின் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்