பப்ஜி மதன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

குண்டர் சட்டத்தில் தன்னை சிறையிலடைத்ததை எதிர்த்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.;

Update: 2021-12-07 14:10 GMT
மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி,  பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு குறித்து தமிழ்நாடு அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி மதன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், வி.சிவஞானம் அமர்வு,    காவல்துறை தரப்பு எதிர்ப்பை ஏற்று,  குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கை விரைவில் விசாரிக்க கோரிய பப்ஜி மதனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்