குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி - சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு

சேலத்தை சேர்ந்த விவசாயி பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-11-22 14:49 GMT
சேலத்தை சேர்ந்த விவசாயி பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தடுத்து நிறுத்திய போலீசார், விசாரணை மேற்கொண்டனர். தம்மம்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் என்பதும் தனது தோட்டத்திற்கு செல்லும் வழியை பயன்படுத்த மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தாகவும் கூறினார். இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயி குமார் வேதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்