தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை - வாய்க்காலில் கிடந்த குழந்தையின் உடல்

கடலூர் அருகே பிறந்த தொப்புள் கொடியுடன் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Update: 2021-11-20 10:33 GMT
தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை - வாய்க்காலில் கிடந்த குழந்தையின் உடல்

கடலூர் அருகே பிறந்த தொப்புள் கொடியுடன் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். புவனகிரி அருகே பூதேவராயன்பேட்டை வாய்க்காலில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் இருந்துள்ளது. வயலுக்கு போன  அப்பகுதியினர் குழந்தையை பார்த்ததும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் அங்கு சென்ற புவனகிரி போலீசார் உடலை மீட்டு, குழந்தையின் பெற்றோர் குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்