பணியின்போது கொல்லப்பட்ட டாஸ்மாக் ஊழியர் - டாஸ்மாக் ஊழியர் குடும்பத்துக்கு இழப்பீடு

காஞ்சிபுரம் அருகே வடமாநில இளைஞர்களால் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.;

Update: 2021-11-16 00:20 GMT
காஞ்சிபுரம் அருகே வடமாநில இளைஞர்களால் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம், ஒரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் மற்றும் அவரது உதவியாளர் மீது வடமாநில இளைஞர்கள் நடத்திய தாக்குதலில் விற்பனையாளர் துளசிதாஸ் உயிரிழந்தார். இந்நிலையில் துளசிதாஸ் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், நிவாரண தொகைக்கான காசோலையை துளசிதாஸ் குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்