மாமனாரை அடித்து கொன்ற மருமகன்: மனைவிக்கு அடைக்கலம் கொடுத்ததால் ஆத்திரம்
மாமனாரை பிவிசி பைப்பால் அடித்து கொன்ற மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மெய்க்காவல்புதூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது இரண்டாவது மகள் ஜெயந்தியை சின்னவளையம் பகுதியை சேரிந்த திலக் என்பவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார். குடும்ப சண்டையால் ஜெயந்தி தாய்வீட்டில் இருக்கும் நிலையில், திலக் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். செல்வராஜ் தடுக்க முயன்றபோது, திலக் பிவிசி பைப்பால் தாக்கவே, சம்பவ இடத்திலே செல்வராஜ் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மருகன் திலக் கைது செய்யப்பட்டார்.