ஆயுத பூஜை - 3000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஆயுதபூஜையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிா்க்க சென்னை கோயம்பேட்டில் இருந்து 3,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.;
தமிழகம் முழுவதும் நாளை ஆயுத பூஜை விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள பிற மாவட்ட மக்கள் சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் வழக்கமாக மற்ற பிற மாவட்டங்களுக்கு 2,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக இரண்டு நாட்களுக்கு 1500 பேருந்துகள் வீதம் 3000 சிறப்பு பேருந்துகளை இயக்கிட போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் பயணிகள் கூட்டம் குறைவாக இருப்பதன் காரணமாக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நீண்ட நேரம் காத்திருப்புக்குப் பிறகு பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.