உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் உயிரிழப்பு: 8ஆம் தேதி ஆர்பாட்டம்- திருமாவளவன் அறிக்கை

விவசாயிகள் படுகொலை சம்பவத்தை கண்டித்து வருகிற 8 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடத்த இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-10-06 04:05 GMT
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின்  உயிரிழப்புக்கு காரணமான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மற்றும் அவரது நண்பர்களைக் கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து சென்னையில் வருகிற 8 ஆம் தேதி ஆர்பாட்டம் நடத்த இருப்பதாக கூறியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்