ஊரக உள்ளாட்சி தேர்தல் களம்: தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு பரிசீலனை
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்திய அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளை, காவல்துறையினர் கைது செய்தனர்.;
வேட்பு மனு பரிசீலனையின் போது, அதிமுக, பாஜக வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில், அதிமுக பாஜக நிர்வாகிகள் ஈடுபட்டனர். சமரச முயற்சியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்திலும் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். இதனால் போலீசார் அனைவரையும் கைது செய்து அழைத்து சென்றனர்.