மூன்று வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை - தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடும் போலீசார்

மூன்று வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை - தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடும் போலீசார்;

Update: 2021-09-14 11:48 GMT
மூன்று வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை - தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடும் போலீசார் 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மூன்று வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் பத்து சவரன் தங்க நகைகளுடன் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கன்னியப்பன் என்பவரது பூட்டிய வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகை 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த சுந்தர மூர்த்தி மற்றும் முனுசாமி ஆகியோரின் வீடுகளிலும், நகை, பணம்  கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவங்கள் குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்