கொடநாடு வழக்கு - குற்றவாளிகள் தப்ப முடியாது

கொடநாடு வழக்கு - குற்றவாளிகள் தப்ப முடியாது;

Update: 2021-09-13 10:48 GMT
கொடநாடு வழக்கு - குற்றவாளிகள் தப்ப முடியாது
 
கொடநாடு வழக்கு குறித்து தொடர்ந்து விசாரிக்கப்படும் எனவும், உண்மைக்குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.காவல்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெ.ஜெ.நகர் அம்மா உணவகம் மீதான தாக்குதல், திருச்சியில் மணல் கடத்தல் வழக்கு உள்ளிட்ட புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.அதேவேளை அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் எவ்வளவு நாட்கள் கழித்து கைது செய்யப்பட்டனர் என்பதை மக்கள் நன்கு அறிவர் என தெரிவித்தார்.குறிப்பாக, கொடநாடு வழக்கில் நீண்ட நாட்களுக்கு பிறகே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக கூறிய முதலமைச்சர்,திமுக ஆட்சியில் கொடநாடு வழக்கு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் எனவும்,விசாரணையில் உண்மைக்குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என உறுதி அளித்தார்
Tags:    

மேலும் செய்திகள்